மடகஸ்கார் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, இலங்கை கடற்றொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் 2ஆம் திகதி சர்வதேச கடல் பகுதியில் வைத்து மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் 8 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள், உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை இல்லாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கைது செய்யப்பட்டுள்ள எட்டு பேரில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடற்றொழிலாளர்கள் 16 தொன்களுக்கும் அதிகமான சுறாக்களை சட்டவிரோதமாக பிடித்தமையினாலேயே கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.