திறமையான தொழிலாளர்களுக்கு அதிக வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

திறமையான பணியாளர்களுக்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பதில் அதிக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைமை அலுவலகத்திற்கு இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் பணியிடங்களில் ஏற்படும் சர்ச்சைகளை விரைவுபடுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு உரிமம் பெற்றவர்களின் பொறுப்புகள், சிரத்தையுடன் நிறைவேற்றப்படுகின்றதா என்பது தொடர்பில் ஜனாதிபதி வினவியுள்ளார்.

சட்டத்தை மீறிய வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக 2,832 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்தகைய குழுக்களை கறுப்புப் பட்டியலில் சேர்த்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply