எமிரேட்ஸ் குழுமம் அதன் அண்மைய உலகளாவிய ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் 350 பதவிகளில் 17,300 பேரை பணியமர்த்த இலக்கு வைத்துள்ளது.
எமிரேட்ஸில் கேபின் குழுவினர், விமானிகள், பொறியாளர்கள், வணிகம் – விற்பனை, வாடிக்கையாளர் சேவை, தரை கையாளுதல், கேட்டரிங், தகவல் தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் நிதி உள்ளிட்ட அனைத்து வகையான பிரிவுகளுக்கும் ஊழியர்கள் அடுத்த நிதியாண்டிற்குள் பணியமர்த்தப்படுவார்கள்.
எமிரேட்ஸ் குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் dnata, பொருட்கள் சேவை, கேட்டரிங் மற்றும் தரை கையாளுதல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற 4,000 க்கும் மேற்பட்டவர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் எமிரேட்ஸ் ஊழியர்கள் மிகப்பெரிய விஷேட கொடுப்பனவுகளை அனுபவித்துள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் 22 வார சம்பளம் வழங்கப்பட்டது.
நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைப் பார்க்க பணியாளர்களை அனுமதிக்கும் வகையில் ஊழியர்கள் குறைந்தபட்சம் 30 நாட்கள் வருடாந்திர விடுப்பு, வரி இல்லாத சம்பளம், பயணச் சலுகைகள் ஆகியவற்றையும் அனுபவிக்கின்றனர்.
2022 முதல் 41,000 க்கும் மேற்பட்ட திறமையான ஊழியர்கள் குழுவால் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டில் மட்டும் எமிரேட்ஸ் குழுமத்தின் பல்வேறு பதவிகளுக்கான 3.7 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், இந்தப் பதவிகளுக்கான போட்டி கடுமையாக உள்ளது.