உலக சாதனை படைத்த ஒன்றரை வயதுக் குழந்தை – இலங்கையில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என பெற்றோர் கவலை

அனுராதபுர மாவட்டம் அழகப்பெருமாகம பகுதியில், 2020 ஆம் ஆண்டு மே 8 ஆம் திகதி அன்று பிறந்தவரான ஐரின் என்ற ஒன்றரை வந்துக்குழந்தை உலக சாதனை படைத்துள்ளார்.

அதாவது 7 நிமிடங்கள் மற்றும் 6 வினாடிகளில் அதிக எண்ணிக்கையிலான பறவைகளை அடையாளம் கண்டு உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். ஆசிய சாதனை புத்தகத்திலும் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

பூக்கள், விலங்குகள், வாகனங்களை வடிவமைப்பது போன்ற 500க்கும் மேற்பட்ட படங்களை அவர் குறுகிய நேரத்துக்குள் அடையாளம் கண்டுள்ளார். மேலும் அந்த குழந்தையால் 25க்கும் மேற்பட்ட இலங்கைத் தலைவர்களை அடையாளம் காண்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் தலைவர்கள் உட்பட பல தலைவர்களின் புகைப்படங்களை சரியாக அடையாளம் காட்டி உலக சாதனை படைத்துள்ளார்.

குழந்தைக்கு ஒரு வயதாகும் போது பெற்றோர்கள்,விலங்குகள் மற்றும் பறைவைகளின் புகைப்படங்களை குழந்தைக்கு காண்பித்து அவற்றை அடையாளம் காணும் வகையில் பயிற்சிகளை பெற்றோர் அன்பாக வழங்கியுள்ளனர்.

காலையில் எழும்பும் போதே குறித்த குழந்தை இந்த புகைப்படங்களை இனம் காண்பதற்கு ஆர்வமாக உள்ளதை அறிந்து கொண்டனர். அதன் பின்னர் மன்னர்கள், உலகத்தலைவர்களின் படங்களை இனம் காண்பதற்கு குழந்தையிடம் பெற்றோர் மென்மையான பயிற்சிகளை வழங்கி குழந்தை இப்போது பல்வேறு திறமைகளுடன் மிளிர்கிறது. 30க்கும் மேற்பட்ட பாடல்களை குறித்த குழந்தை மனப் பாடம் செய்து ஒப்புபிக்கும் அதீத திறமையும் கொண்டுள்ளது.

எனது அம்மா எம்மை கஸ்டபட்டு வளர்த்தார். நாங்கள் நான்கு சகோதரங்கள். ஆகவே எனது பிள்ளை திறமையாக வர வேண்டும் என்று நான் நினைத்து குழந்தையுடன் அன்பாகவும், அறிவாகவும், விளையாட்டாகவும் பேசி அவரின் திறமைகளை தற்போது வளர்த்து வருகிறேன் .

இதுவரை எனது குழந்தையின் திறமையை எந்த தலைவர்களும் பாராட்ட வரவில்லை, அங்கீகாரமும் வழங்கவில்லை என குழந்தையின் தாய் கவலையுடன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply