ஸ்பெய்ன் அணியை வீழ்த்தி யூரோ மகளிர் கிண்ணத்தை கைப்பற்றியது இங்கிலாந்து அணி

UEFA மகளிர் அணிகளுக்கிடையிலான 2025ம் ஆண்டிற்கான யூரோ கிண்ண தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் அணியை வீழ்த்தி இங்கிலாந்து மகளிர் அணி கிண்ணத்தை கைப்பற்றி அசத்தியது. சுவிட்ஸர்லாந்தின் சென்.ஜேக்கப் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்பெய்ன் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடாத்தின. கிட்டத்தட்ட 34000 பேர் இறுதிப்போட்டியை பார்வையிட வருகைதந்திருந்தனர். இரு நாட்டு ரசிகர்களும் அரங்கம் முழுக்க நிரம்பியிருக்க போட்டி ஆரம்பமானது.

போட்டி தொடங்கியதிலிருந்தே கோலினை பதிவு செய்ய இரு அணிகளும் மும்முரம் காட்டியவேளை போட்டியின் 25வது நிமிடத்தில் ஸ்பெய்ன் வீராங்கனை மரியோனா கல்டேன்டே ஸ்பெய்ன் அணியை 1-0 என முன்னிலைப்படுத்தி அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து அணி பல முயற்சிகளை மேற்கொண்டும் அது கைகூடவில்லை.

முதல் பாதி முடிவடைந்து இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய நிலையில் போட்டியில் முன்னிலைப்பெற ஸ்பெய்ன் அணியும் கோலினை பதிவு செய்து போட்டியை சமப்படுத்த இங்கிலாந்து அணியும் தொடர் முயற்சிகளை மேற்கொண்ட நிலையில் 57வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை அலெஸ்ஸியதா ருஸ்சோ இங்கிலாந்து ரசிகர்களை சந்தோஷ கடலில் திகைக்க வைத்தார். இங்கிலாந்து அணி 1-1 என போட்டியை சமப்படுத்தி அசத்த இரு அணிகளும் மேலதிக கோலினை பதிவு செய்து வெற்றிக்கிண்ணத்தை கையில் ஏந்த தொடர்ந்தும் பல முயற்சிகளை மேற்கொண்டணர்.

இறுதிவரை மேலதிக கோல் பதிவு செய்யப்படாததால் வெற்றியாளரை தீர்மானிக்க பெனால்ட்டி சூட் முறைக்கு போட்டி மாற்றப்பட்டது. இங்கிலாற்து மகளிர் அணியினர் பெனால்ட்டி சூட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்த 3-1 என்ற ரீதியில் ஸ்பெய்ன் அணியை வீழ்த்தி இப்பருவகாலத்திற்கான UEFA மகளிர் யூரோ கிண்ணத்தை இங்கிலாந்து மகளிர் அணி கைப்பற்றி அசத்தியது.

இங்கிலாந்து – ஸ்பெய்ன்

இங்கிலாந்து மற்றும் ஸ்பெய்ன் மகளிர் அணிகள் இதற்கு முன்னர் 09 தடவைகள் ஒன்றையொன்று யூரோ கிண்ணத்தில் எதிர்த்து விளையாடியுள்ளனர். முதல் முறையாக 1993ம் ஆண்டு விளையாடி இருந்தனர். இறுதியாக 2022 ம் ஆண்டு விளையாடி இருந்த நிலையில் நேற்றைய இறுதிப்போட்டியில் 09வது முறையாக மோதியிருந்தார்கள் மொத்தமாக இரு அணிகளும் 20 கோல்களை அடித்துள்ள நிலையில் இங்கிலாந்து மகளிர் அணி 11-9 என்ற ரீதியில் முன்னிலைப்பெற்றுள்ளது. இதற்கு முன்னர் 2023ம் ஆண்டு நடைபெற்ற பெண்களுக்கான பிபா உலக கிண்ண இறுதிப்போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்தியிருந்த நிலையில் அப்போட்டியில் ஸ்பெய்ன் அணி 1-0 என கிண்ணத்தை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடதக்கது.

மகளிர் யூரோ கிண்ண வரலாறு

UEFA European Championship  போட்டிகள் முதல் முறையாக 1984ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 4 வருடத்திற்கு ஒரு முறை ஐரோப்பிய நாடுகளை மையமாக கொண்டு நடைபெறும் குறித்த தொடரானது இதுவரை 14 முறை நடைபெற்றுள்ளது. நடப்பு சம்பியனாக இங்கிலாந்து அணி காணப்படுவதுடன், கடந்த முறை (2022) ஜேர்மனியை 2-1 என்ற அடிப்படையில் வீழ்த்தி வெற்றிப்பெற்றிருந்ததுடன் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ளது இங்கிலாந்து மகளிர் அணி. யூரோ மகளிர் கிண்ணத்தை அதிகடியாக ஜேர்மனி அணி 8 முறை கைப்பற்றியுள்ளது. இம்முறை ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்ற 14வது UEFA மகளிர் யூரோ கிண்ணத்தை இங்கிலாந்து மகளிர் அணி இரண்டாவது முறையாக தொடர்ச்சியாக கைப்பற்றி புதிய சாதனையை படைத்துள்ளமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *