மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதி பகுதியில் இன்று (29) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் அப்பகுதியில் இருந்த மரங்கள் புல்வெளிகள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.
இதன்பின்னர் மட்டக்களப்பு நகரசபை தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
குறித்த பகுதியில் இன்று (29) நண்பகல் 12 மணியளவில் புல் தரைகளில் தீ பரவ ஆரம்பித்த நிலையில் மரங்களில் பற்றியதுடன் புகையிரத எஞ்சின் திரும்பும் பகுதி மற்றும் புகையிரத பெற்றோல் தாங்கி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பகுதியை நோக்கி தீ பரவத் தொடங்கியது.
இதனையடுத்து மாநகரசபை முதல்வர் சிவன் பாக்கியநாதன் மற்றும் உறுப்பினர்கள் தீயணைப்பு படையினர் மற்றும் இராணுவத்தினர் சுமார் 2 மணித்தியால போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பட்டிற்குள் கொண்டுவந்தனர்.