உயிரிழந்தோரின் உறவினர்களை அலையவைக்கும் திருகோணமலை பொது வைத்தியசாலை

விபத்துக்கள் மற்றும் யானைகளின் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் சட்ட வைத்திய  நிபுணரின் அறிக்கைகளுக்காக பிரேத பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு தூர இடங்களிலிருந்து சடலங்கள் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுகின்றது. 

இந்நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத குளிரூட்டி  பழுதடைந்த நிலையில் காணப்படுவதால் சடலத்தை பாதுகாக்கும் நோக்கில் கந்தளாய் வைத்தியசாலை பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. 

திருகோணமலை மாவட்டத்தில்  தூர இடங்களில் இருந்து வரும் மக்கள் பண வசதி குறைந்தவர்களாக காணப்படுகின்ற நிலையில் சடலங்களை பிரேத பரிசோதனை மேற்கொள்ளும் வரை குளிர்சாதன பெட்டி இல்லாமையினால் வெவ்வேறு வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றது. 

ஆகவே திருகோணமலை பொது வைத்தியசாலை நிர்வாகம் மத்திய அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு பிரேதங்களை பாதுகாப்பதற்காக வேண்டி பழுதடைந்து காணப்படுகின்ற  குளிர்சாதன பெட்டியை திருத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *