ஒரு அழகான கடற்கரை மனங்கவரும் ஒரு சுற்றுலாத்தளம் ” என்ற கருப்பொருளில் நாடளாவிய ரீதியில் கடற்கரைகளை சுத்தம் செய்யும் திட்டம் இன்று பண்ணை கடற்கரையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கடற்கரையினை சுத்தப்படுத்தும் ஆரம்ப நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.ம. பிரதீபன் இணைந்து சிறப்பித்ததுடன் சுத்தப்படுத்தும் பணியிலும் இணைந்து கொண்டார்.
மேன்மைதங்கிய கௌரவ ஜனாதிபதியின் உயரிய எண்ணக்கருவில் அமைந்த ‘Clean SriLanka’ திட்டத்தின் மூலம் சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்திருத்தல், டிஜிட்டல் மயமாக்கல், வறுமை ஒழிப்பு முதலான விடயங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இத் தேசிய ரீதியான திட்டத்தினை செயற்படுத்திடும் நோக்கில் பண்ணைகடற்கரைப் பிரதேசத்தினை சுத்தம் செய்யும் பணி இன்று காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டது. குறித்த தூய்மைப்படுத்தும் பணியானது 51 ஆவது படைப்பிரிவின் கட்டளைத் தளபதியின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இச்சுத்தப்படுத்தும் பணியில் யாழ்ப்பாண மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர் ,இராணுவ உயர் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள்,
இராணுவத்தினர், பொலிஸார் எனப் பலரும் கலந்துகொண்டனர்.