FORMULA ONE CHAMPIONSHIP தொடரில் 06வது வெற்றியை பதிவுசெய்து அசத்தினார் ஒஸ்கார் பியாஸ்ட்ரி

இப் பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன, 24 சுற்றுக்களை கொண்டதாக இம்முறை கிரோன்ப்ரீ போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் இதுவரை 12 குரொன்ப்ரீ போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 5 போட்டிகளில் பியாஸ்ட்ரி வெற்றிப்பெற்று அசத்தியிருந்தார். நொரிஸ் 04 வெற்றிகளையும் வெஸ்டாபன் இரண்டு போட்டியிலும்;, ரஸ்ஸல் ஒரு போட்டியிலும் வெற்றிப்பெற்றிருந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் 13வது குரொன்ப்ரீ போட்டி பெல்ஜியத்தில் நடைபெற்றது. இந்நிலையில் 4 சுற்றுக்களை கொண்டதாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆரம்பமே முன்னனி வீரர்களின் ஆக்ரோஸமான தொடக்கத்துடன் சூடுபிடிக்க தொடங்கியது.

நொரிஸ் முன்னிலைப்பெற பியாஸ்ட்ரி இரண்டாமிடத்திலும் லெக்லர்க் 3மிடத்திலும் வெஸ்டாபன் 4மிடத்திலும் போட்டியை தொடர்ந்தனர். 4வது சுற்றில் வைத்து மீண்டும் போட்டி ஆரம்பமானதை தொடர்ந்து. வீரர்கள் முன்னிலைப்பெற மும்முரம் காட்டினார்கள், ஓடுபாதை ஈரப்பதமாக காணப்பட்டதால் வாகனங்களை செலுத்த வீரர்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இப்பருவகாலத்தில் முன்னிலை வகிக்கின்ற ஒரே அணியை சேர்ந்த நொரிஸ் மற்றும் பியாஸ்ரி ஆகியோர் முதலிடத்திற்கான போட்டியில் ஆதிக்கம் செலுத்தி வருவதால். இவர்கள் இருவரும் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.அதனடிப்படையில் 5வது சுற்றில் பியாஸ்ட்ரி நொரிஸை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

6வது சுற்றில் வைத்து 6மிடத்திலிருந்த அலெக்ஸ் அல்பன் 5மிடத்திற்கு முன்னேறினார். 8வது சுற்றில் வைத்து 17மிடத்திலிருந்த லூயிஸ் ஹெமில்டன் 16மிடத்திற்கு முன்னேறினார். பின்னர் 15மிடத்திற்கு முன்னேறி அசத்தினார். 9வது சுற்றில் வைத்து 14மிடத்திற்கு வந்தார். பின்னர் அதே சுற்றில் 13வது இடத்திற்கு முன்னேறினார். இந்நிலையில் 12வது சுற்றில் வைத்து பிட்ஸ்டொப்பிற்கு வந்தார்.

13வது சுற்றில் பியாஸ்ட்ரி தனது முதல் பிட்ஸ்டொப்பை பயன்படுத்தினார். தொடர்ச்சியாக சிறப்பாக வானத்தை செலுத்திய ஹெமில்டன் 13வது சுற்றில் வைத்து 10மிடத்திற்கு முன்னேறி அசத்தினார். நொரிஸ் முதலிடத்தில் போட்டியை தொடர்ந்தார். இருந்தும் அவரது வாகனத்தின் டயரில் சிறு பிரச்சனை ஏற்பட தொடங்கியது. இதனால் அவர் பிட்ஸ்டொப்பிற்கு வந்தார். இதனால் 14வது சுற்றில் பியாஸ்ட்ரி மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார்.

17வது சுற்றில் சைத்து பின்கலத்தில் அடுத்தடுத்து மாற்றங்கள் நிகழ்ந்தது. பியர்மன் 13வது இடத்திற்கு முன்னேறி அலன்சோ பின்தள்ளப்பட்டார். 26வது சுற்றில் வைத்து இரண்டாமிடத்தில் இருந்த நொரிஸ் கட்டுப்பாட்டை இழக்க சென்றார் இருந்தும் சுதாகரித்துகொண்டு போட்டியில் தொடர்ந்தார். 33வது சுற்றில் வைத்து சிறப்பாக செய்ற்ப்பட்ட ஹெமில்டன் 7மிடத்திற்கு முன்னேறினார்.

39வது சுற்றில் வைத்து பியாஸ்ட்ரி மற்றும் நொரிஸிற்கிடையில் முதலிடத்திற்கான போட்டி தொடர்ந்தது. 43வது சுற்றிலும் இதே நிலை தொடர்ந்தது. ஆனால் பியாஸ்ட்ரி முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டார்.

இந்நிலையில் 44 சுற்றுக்களையும் 1 மணித்தியாலம் 25 நிமிடங்கள் 22 செக்கன்களில் போட்டி தூரத்தை நிறைவு செய்து பெல்ஜியம் குரோன்ப்ரீ சம்பியனாக மாற்றம் பெற்றார் ஒஸ்கா பியாஸ்ட்ரி. இது இப்பருவகாலத்தில் அவரது 6வது வெற்றியாக மாற்றம் பெற்றது.

ஒட்டுமொத்த புள்ளிகளின் அடிப்படையில் ஒஸ்கா பியாஸ்ட்ரி 266 புள்ளிகளை பெற்று முதலிடத்திலும் லெண்டோ நொரிஸ் 250 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் வெஸ்டாபன் பாரிய இடைவெளியில் 185 புள்ளிகளுடன் 3மிடத்திலும் காணப்படுகிறார். அதேநேரம் அணிகளின் தரவரிசையில் மெக்லாரன் மெர்சிடிஸ் 516 புள்ளிகளுடன் முதலிடத்திலும் பெர்ராரி 248 புள்ளிகளுடன் இரண்டாமிடத்திலும் ரெட்புல் அணி 220 புள்ளிகளுடன் 3மிடத்திலும் காணப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *