பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிரித்த போதைப்பொருள் பாவனை – அமைச்சர் வெளியிட்ட தகவல்

 

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளமை  பாரதூரமானது என  உணவு பாதுகாப்பு மற்றும் வணிக அமைச்சர்  வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

அநுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளமை பாரதூரமானதுடன், துரதிஸ்டவசமானது.

போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் வியாபாரத்துக்குமிடையில் அரசியல் தொடர்பிருப்பதாக கடந்த காலங்களில் குறிப்பிடப்பட்டது. 

எமது அரசாங்கத்துக்கும் போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது.

போதைப்பொருள் ஒழிப்புக்கு கல்வி அமைச்சு மட்டத்தில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *