ஹட்டன் நகரில் அன்றாடம் சேகரிக்கப்படும் கழிவுகள் உரிய முறையில் அப்புறப்படுத்தப்படாமையினால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் ரொத்தஷ்ட் பகுதியில் குப்பைகள் குவிந்து காணப்படுகின்றமையால் குறித்த வீதியின் ஊடாக பயணிக்கும் பொதுக்கள் மற்றும் வாகன சாரதிகள் அசௌகரியங்களை எதிர் நோக்குவதாக பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
ஹட்டன் நகரப்புகுதியில் அன்றாடம் சேகரிக்கப்படும் கழிவுகள் குறித்த பகுதியில் கொட்டப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன்காரணமாக அந்த பகுதிகளில் அதிக துர்நாற்றம் வீசுவதுடன் நுளம்பு பெருக்கம் காணப்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.
இதனால் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஹட்டன் கொழும்பு, மற்றும் ஹட்டன் கண்டி, நாவலபிட்டி ஆகிய பிரதேசங்களுக்கு பேருந்தின் ஊடாக செல்லும் பயணிகள் துர்நாற்றம் காரணமாக சுகாதார சீர்கேடுகளை எதிர்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே வீதியோரமாக கொட்டப்படும் கழிவுகளை உரிய இடத்தில் அப்புறப்படுத்துவதற்கு ஹட்டன் டிக்கோய நகரசபையினால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.