மாணவிக்கு தகாத வீடியோ அனுப்பிய ஆசிரியையின் கணவர்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 

மாணவிக்கு தகாத வீடியோ அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியையின் கணவரை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு மேலதிக நீதவான் கசுன் காஞ்சன திசாநாயக்க நேற்று இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

ஆசிரியர் அளித்த முறைப்பாடு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரானபோது, பொலிஸ் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் அளித்த அறிக்கைகளை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆபாசப் படங்களுக்கு அடிமையானதாகக் கூறப்படும் சந்தேகநபர், தனது மனைவியுடன் உடலுறவில் இருந்ததையும் இரகசியமாகப் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், குடும்ப தகராறில் மனைவியிடம் கல்வி கற்கும் மாணவிக்கு அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

முறைப்பாடு அளித்த ஆசிரியையான மனைவிக்கும்,  அவரது கணவருக்கும் இடையில் அண்மையில் ஏற்பட்ட தகராறினால் ஏற்பட்ட படங்களை பகிர்ந்து சந்தேகநபர் பழிவாங்க எண்ணியதாக நீதிமன்றத்தில் மேலும் தெரியவந்துள்ளது.

அறிக்கைகளை பரிசீலித்த பின்னர், சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிபதி பொலிஸ் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *