
1990 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம்களின் வரலாறு இரத்தத்தால் எழுதப்பட்ட ஆண்டாகும். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டதும் வட மாகாண முஸ்லிம்கள் புலிகளால் வெளியேற்றப்பட்டதும் இந்த ஆண்டில்தான். புலிகளின் ஆயுதப் போராட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் தோற்கடிக்கப்படும் வரையும் விடுதலைப் புலிகள் இயக்கம் முஸ்லிம் புத்திஜீவிகளை, அரசியல்வாதிகளை, படுகொலை செய்தல், கப்பம் அறவிடல், கடத்தல் உட்பட முஸ்லிம் சமூகத்தின் வியாபாரம், விவசாயம் மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தல் என்று தொடங்கி முஸ்லிம் இனச் சுத்திகரிப்புக்கு வழிசமைக்கும் கூட்டுப் படுகொலைகளையும் அரங்கேற்றியது.