பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை, தற்போது நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த பிரேரணை நாளை மறுதினம் நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டு, பிற்பகல் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படவுள்ளது.
தேசபந்து தென்னகோன் அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகவும் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில், அவையனைத்தும் நிரூபிக்கப்பட்டன.
இந்தநிலையில், தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.