நுவரெலியாவுக்கு வருகை தந்த இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள் வரவேற்றனர்.
இதேவேளை , இருதரபினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
சந்திப்பில், இலங்கை தொழிலாளர் காங்கிஸின் தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், தவிசாளரும், நிதிச் செயலாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன், பிரதி தவிசாளர் ராஜதுரை, இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகராலய குழுவினர் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிஸின் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் பிரதி தலைவர்கள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது.
மேலும் இதன்போது, மலையகத்தில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் குறித்தும் அவற்றின் முன்னேற்றம் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
இதேவேளை, எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் வேலை திட்டங்கள் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிஸினால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.