ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போடைஸ் தோட்ட என்.சீ பிரிவில் இரவில் சுற்றித் திரியும் சிறுத்தையினால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தங்கள் தோட்டத்திற்கு அருகிலுள்ள அடர்ந்த காட்டில் வசிக்கும் குறித்த சிறுத்தை இரவில் தங்கள் வீடுகளுக்கு அருகில் இரை தேடி வருவதாகவும், தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளை இரையாக இழுத்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் சிறுத்தையின் அச்சுறுத்தல் காரணமாக இரவு வேளைகளில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடித்து, வேறு பொருத்தமான சூழலில் விடுவிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை சிறுத்தையின் நடமாட்டம் குறித்த CCTV வீடியோவொன்று வெளியாகியுள்ளது. குறித்த வீடியோவில் வீட்டொன்றில் வளர்க்கப்பட்ட நாயை சிறுத்தையொன்று இழுத்துச் செல்லும் காட்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வீடியோ –