நல்லூருக்காக எடுக்கப்பட்ட மண் :எடுத்த இடத்திலே போடப்பட வேண்டும்- கோரிக்கை விடுத்த அர்ச்சுனா எம்.பி!

நல்லூரிலே எடுக்கப்படுகின்ற மண்ணுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். எடுக்கப்பட்ட மண்  மறுபடியும் எடுத்த இடத்திலே போடப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோரிக்கை விடுத்துள்ளார்

இன்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்

மேலும், செம்மணி தொடர்பில் ஹர்சன நானயகார இது  ஒரு காதால் சொல்லப்பட்ட செய்தி இது உண்மையான விடயமல்ல,  கொலை செய்யப்பட்ட விடயமல்ல என்றார்.

ஆனால்  எங்களுடைய இனத்தின் உடலங்கள் புதைக்கப்பட்டு இப்போது தோண்டி எடுக்கப்படுகின்றது இதற்கு ஒரு சர்வதேச விசாரணை வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்

மேலும் முகப்புத்தக பதிவுக்கு என்னை சிஐடி அழைத்திருந்தார்கள்  ஆனந்த சுதாகர் போன்ற பயங்கரவாத தடைச்சட்டத்தால் இருக்கிறார்கள் எத்தனையோ சகோதரர்களை 20,  25 வருடங்கள் இச்சட்டத்தில் வைத்திருக்கிறார்கள்அது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதே நேரம் பிரதமர் ஹரிணி அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடத்திய கூட்டம் தொடர்பில் அதிபர் ஆசிரியர்களும் பின்னால் நித்திரை கொண்டது ஒரு பாரதூரமான விடயமாக கருதப்பட்டது .எடுத்த விதத்திலே கல்விச்செயற்பாடுகளை தலைகீழாக மாற்றுவதை முன்னிட்டு கவலையடைகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *