பொலன்னறுவை, வெலிகந்த நாகஸ்தென்ன பகுதியில் கால்வாயில் தவறி விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சிறுவன் ஆடுகளை பார்க்க சென்றபோதே வெலிகந்த பகுதியிலுள்ள கால்வாயில் தவறி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆடுகளைப் பார்க்கப் போவதாக தனது தாயிடம் கூறிவிட்டு, சிறுவன் இவ்வாறு அங்கு சென்றுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.