இலங்கைக்கான கனடாவின் உயர்ஸ்தானிகராக பணியாற்றிய எரிக் வோல்ஸ், தனது பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பான பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரவை சந்தித்து, விடைபெற்றார்.
இந்த சந்திப்பின்போது, இருநாடுகளுக்கிடையிலான நீடித்த மற்றும் வலுவான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், எரிக் வோல்ஸ் மேற்கொண்ட அர்ப்பணிப்பு மற்றும் சேவையை பிரதித் அமைச்சர் அருண் ஹேமசந்திர பாராட்டினார்.
அத்துடன் எதிர்காலத்தில் இலங்கைக்கும் கனடாவுக்கும் உள்ள உறவுகளை மேம்படுத்துவதற்கு வர்த்தகம், முதலீடு, ஏற்றுமதி மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு உள்ளிட்ட விஷயங்களில் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் இருவருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.