நீதிக்கான கோரிக்கைகள் ஒருமித்து ஒலிக்க வேண்டும்

கிழக்கு மாகா­ணத்தில் 1990 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த துய­ர­மான சம்­ப­வங்கள், முப்­பந்­தைந்து ஆண்­டுகள் கடந்தும் மக்­களின் மனதில் ஆறாத வடு­வா­கவே உள்­ளது. அந்த கொடூ­ர­மான கால­கட்­டத்தில் முஸ்­லிம்கள் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­தல்கள் மற்றும் படு­கொ­லை­க­ளுக்கு இன்றும் நீதி­கிட்­ட­வில்லை. குறிப்­பாக, 1990 ஜூலையில் நடந்த குருக்­கள்­மடம் படு­கொலை, ஆகஸ்ட் 3 அன்று நடந்த காத்­தான்­குடி பள்­ளி­வாசல் படு­கொலை, ஆகஸ்ட் 12 இல் இடம்­பெற்ற ஏறாவூர் படு­கொலை உள்­ளிட்ட பல படு­கொலைச் சம்­ப­வங்கள், கடத்­தல்கள், பொரு­ளா­தார சூறை­யா­டல்கள் என்­பன பாதிக்­கப்­பட்ட மக்­களின் இத­யத்தில் ஆழ­மான காயங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *