மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஓல்டன் கீழ்ப்பிரிவு பத்தாம் நம்பர் பிரிவில் சீரற்ற கால நிலையால் வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் மூடப்பட்டு, மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
பல முறைகள் இதைப்பற்றி அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இடம்பெறவில்லை.
இதற்கான தீர்வினை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் அங்கு உள்ள மக்களின் உயிரைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து மக்களின் கோரிக்கைக்கு இணங்க மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் முரளி வேண்டு கோள் ஒன்றை விடுத்து உள்ளார்.
சிவனடி பாத மலை தொடர் வனப் பகுதியில் இருந்து காட்டாறு திடீர் திடீரென வனப் பகுதியில் கடும் மழை பெய்யும் பட்சத்தில் இவ்வாறு வெள்ள பெருக்கு ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு இரவு நேரத்தில் வரும் பட்சத்தில் பாரிய உயிர் சேதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உடனடியாக இதற்கு பொறுப்பான அதிகாரிகள் உடனே தீர்வினை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.