நாட்டுக்கோட்டை நகரத்தார் நாவலப்பிட்டி ஸ்ரீ கதிர்வேலாயுத ஸ்வாமி திருக்கோயில் வருடாந்த தேர் திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இன்று காலை விசேட பூஜைகள் இடம்பெற்றிருந்த நிலையில், வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கதிர்வேலாயுத ஸ்வாமி, அலங்கரிக்கப்பட்ட சித்திர தேரில் மங்கல வாத்தியங்கள் முழங்க பக்தர்களின் அரோகரா கோஷங்களுடன் நகரம் முழுவதும் உலா வந்தார்.