தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நிர்வகிக்கப்படுகின்ற இளைஞர் கழகங்களுக்கான 19 ஆவது தேசிய இளைஞர் சம்மேளன தெரிவானது சர்வதேச இளைஞர் தினமான எதிர்வரும் 12ஆம் திகதி ஜனாதிபதி அவர்களின் தலைமையில் தேசிய இளைஞர் சம்மேளனம் அமைக்கப்படவுள்ளது.
சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் விழிப்புணர்வு நடைபயணம் முன்னெடுக்கப்படுகின்றது.
இந்த நிலையில் மன்னார் மாவட்டத்திலும் இன்று (08) வெள்ளிகிழமை முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் பஸார் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமான குறித்த நடைபயணம் பிரதான வீதியூடாக சென்று மன்னார்- தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அலுவலகத்தை சென்றடைந்தது.
இதன் போது இளைஞர்கள் போதைப்பொருள் பாவனைக்கு எதிராகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாகவும் பல பதாகைகள் ஏந்தி வீதி வழியாக தமது பேரணியை மேற்கொண்டனர்.
குறித்த விழிப்புணர்வு நடைபயணத்தில் மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவி பணிப்பாளர் பூலோக ராஜா, இளைஞர் சேவை அதிகாரிகள்,இளைஞர்கள், யுவதிகள் என பலர் கலந்து கொண்டனர்.