யாழில் மாணவியை பலியெடுத்த மர்மக் காய்ச்சல்!- நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தொடர் மயக்கநிலையில் இருந்த 16 வயது மாணவி ஒருவர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்

 அச்சுவேலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தில் தரம் 11இல் கல்வி பயிலும் சந்திரானந்தன் வர்ணயா  என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

குறித்த மாணவிக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் கடந்த மாதம் 5-ம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ட்டார் 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட சில சில தினங்களில் குறித்த மாணவி மயக்க நிலையை அடைந்துள்ளார். 

தொடர்ச்சியாக மயக்க நிலையில் இருந்து வந்த நிலையில் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

கிருமித் தொற்று காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *