வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று இரவு நடைபெற்றதுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹராவின் இறுதி ரந்தோலி பெரஹரா நேற்று இரவு வெகு சிறப்பாக இடம்பெற்றது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஆயிரக்கணக்கான மக்களுடன் இணைந்து பெரஹராவைக் கண்டுகளித்தார்.
ஜனாதிபதியுடன் இணைந்து அமைச்சர்களான ஹினிதும சுனில் செனவி, கே.டி. லால்காந்த, மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.