தேசிய பூங்காக்களை பார்வையிடுவதற்காக இன்று(10) முதல் ஒன்லைன் ஊடாக நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி , வனஜீவராசிகள் பாதுகாப்புதிணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மூலம் நுழைவுச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கவுடுல்ல தேசிய பூங்காவில் நேற்று (9) நீண்ட வரிசைகள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் அசௌகரிங்களுக்குள்ளானதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.