ஐ.சி.சி. ஆடவர் ஒருநாள் அணி தரவரிசையில் இலங்கை அணி மீண்டும் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறி, 103 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
2025 ஆகஸ்ட் 10, அன்று வெளியிடப்பட்ட அண்மைய தரவரிசைப் புதுப்பிப்பின்படி, இலங்கை பாகிஸ்தானை முந்தியது.
பாகிஸ்தான் 102 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இந்தியா 124 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா 109 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளன.
ஆனால் தசம வித்தியாசங்களால் பிரிக்கப்பட்டுள்ளன.
முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள் பட்டியலில் தென்னாப்பிரிக்கா (6 ஆவது இடம்), ஆப்கானிஸ்தான் (7 ஆவது இடம்), இங்கிலாந்து (8 ஆவது இடம்), மேற்கிந்திய தீவுகள் (9 ஆவது இடம்) மற்றும் பங்களாதேஷ் (10வது இடம்) ஆகியவை இடம் பெற்றுள்ளன.