வடக்கில் தொழில் வாய்ப்பில்லாத இளையோருக்கு அரச காணிகளை பகிர்ந்தளியுங்கள் – சபா குகதாஸ் கோரிக்கை!

75%  இளையோர் அடிப்படை மூலதனம்  இன்மையால் அவர்களது பெறுமதியான இளமைக்காலம்  இருண்டயுகமாக மாறியுள்ளது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களை நோக்கி நாட்டை வழிநடத்த வாருங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க அழைப்பு விடுத்துள்ளார் நாங்களும் அதனை வரவேற்கின்றோம் ஆனால் கொடிய யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் இளையோர் ஒரு இலட்சத்திற்கு அதிகமானோர் தொழில் வாய்ப்புக்கள் இன்றி குடும்ப வறுமையில் அடிப்படை வாழ்க்கைப் பின்னடைவை சந்தித்துள்ளனர். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டை விவசாய ரீதியாக கட்டி வளர்க்க வேண்டும் என பல முயற்சிகளை மேற் கொள்ளும் உங்கள் அரசாங்கம் வடக்கில் தொழில் வாய்ப்பு இல்லாது தொழில் வாய்ப்புக்காக காத்திருக்கும் இளையோருக்கு அரச காணிகளை பகிர்ந்தளித்து ஆரம்ப கட்ட வட்டியில்லாத கடன்களை வழங்கி விவசாயத்தை ஊக்குவியுங்கள் எதிர்கால நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு கைகொடுக்கும்.

ஒரு இளைஞன் தனது குடும்பத்தையும் குடும்பம் சார்ந்த பொருளாதாரத்தையும் சந்தோஷமாக பேணுகின்ற போது தான் நாட்டைப் பற்றி சிந்திக்கின்ற மனநிலை உருவாகும்.

கடந்தகால ஆட்சியாளர்கள் போன்று இளையோரையும் அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளையும் புறம் தள்ளி ஒரு போதும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது.

கடந்தகால உண்மையை உணர்ந்து இளையோரின் எதிர்காலத்தை ஔிமயமாக்க அரச காணிகளை உடனே பகிர்தளியுங்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *