எண்சட்ட மனக் கணித போட்டிகள்;உலக சாதனை படைக்கவுள்ள இலங்கை!

UCMAS கல்வி நிறுவனத்தின் எண்சட்ட மனக் கணித அபகஸ் போட்டி இம்மாதம் 23ம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளதாக UCMAS தலைமை நிர்வாகி விஜய சிவசங்கர் தெரிவித்தார்.

இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு கொழும்பு வெள்ளவத்தையிலுள்ள யுசிமாஸ் காரியாலயத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

1993ம் ஆண்டு மலேசியாவில் ஆரம்பிக்கப்பட்ட யுசிமாஸ் அபகஸ் கற்கையானது இலங்கையில் 2020ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இது ஒரு சர்வதேச பாடத்திட்டமாகும்.

அபகஸ் எண்கணித மனக்கணித போட்டி இலங்கையில் இரண்டு முறை ஏற்கனவே நடைபெற்றுள்ளது. 

அலரிமாளிகையில் நடைபெறவுள்ள போட்டியில் நாடளாவிய ரீதியில் 2500 மாணவர்கள் இதில் பங்குபற்றவுள்ளனர்.

இப்போட்டி வினாத்தாள் மூலமாகவும் வாய்மொழிமூலமாகவும் என இரண்டு பிரிவாக நடைபெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

மேலும் இந்த போட்டி நிகழ்ச்சியின் போது உலக சாதனை ஒன்றும் நிகழ்த்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *