40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அடிப்படை விடயங்களை பூர்த்திசெய்யாததன் காரணமாக அந்த விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏனைய விண்ணப்பங்களில் உள்ளடங்கியுள்ள விடயங்களின் துல்லியமான விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கைகள் கடந்த ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்களின் உரிமையாளர்கள் அடுத்த வருடத்தில் மீண்டும் விண்ணப்பிக்க முடியுமெனவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

Leave a Reply