பெரும்பாலான பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை

கொழும்பு, மார்ச் 12

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய, தென், சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையும், நாட்டின் ஏனைய பகுதிகளின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையும் மழை வீழ்ச்சி பதிவாகும்.

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய நிலையில், தற்காலிகமாக பலத்த காற்று வீசும் என்பதுடன், மின்னலினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply