
அல் ஜெஸீரா வலையமைப்புக்காக காஸாவிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர் அனஸ் அல் ஷரீப் உட்பட அறுவர் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் ஊடக உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது ஊடக சுதந்திரத்தின் மீதும், மனித உரிமைகளின் மீதும் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் என சர்வதேச நாடுகளும் ஊடக நிறுவனங்களும் கண்டித்துள்ளன.