தாய்லாந்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் குளிரூட்டியில் மறைத்து வைத்து நாட்டிற்கு கடத்திவரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருள் கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பேலியகொட, நுகே வீதியில் உள்ள துறைமுக கொள்கலனில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது 6 கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய குஷ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவங்ச தெரிவித்துள்ளார்
இதேவேளை குஷ் போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.