இப் பருவகாலத்திற்கான போர்முலா 1 சம்பியன்சிப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன, 24 சுற்றுக்களை கொண்டதாக இம்முறை கிரோன்ப்ரீ போட்டிகள் நடைபெற்று வருகின்றது.
அந்தவகையில் இதுவரை 13 குரொன்ப்ரீ போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 6 போட்டிகளில் பியாஸ்ட்ரி வெற்றிப்பெற்று அசத்தியிருந்தார். நொரிஸ் 04 வெற்றிகளையும் வெஸ்டாபன் இரண்டு போட்டியிலும்;, ரஸ்ஸல் ஒரு போட்டியிலும் வெற்றிப்பெற்றிருந்த நிலையில் புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் வண்ணம் 14வது குரொன்ப்ரீ போட்டி ஹங்கேரியின் ஹங்கரோரிங் சர்வதேச அரங்கல் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிலையில் 70 சுற்றுக்களை கொண்டதாக இடம்பெற்ற இப்போட்டியில் ஆரம்பமே முன்னனி வீரர்களின் ஆக்ரோஸமான தொடக்கத்துடன் சூடுபிடிக்க தொடங்கியது. லெக்லர்க் முதலிடத்திலிருந்து போட்டியை தொடங்கியிருந்த நிலையில் நொரிஸ் இரண்டாமிடத்திலும் அலோன்சோ மற்றும் ரஸ்ஸல் அடுத்தடுத்த நிலையில் போட்டியில் முன்னிலைப்பெற ஆக்ரோஷமான பலப்பரீட்டசை நடாத்தின.
2வது சுற்றின் போது வெஸ்டாபன் 9மிடத்திலிருந்து போட்டியை தொடர்ந்தார். பியாஸ்ட்ரி 2மிடத்திலும் நொரிஸ் 5மிடத்திலும் காணப்பட்டனர். வெஸ்டாபன் 8மிடத்திற்கு முன்னேறியதுடன் லெக்லர்க் சிறப்பாக செயற்பட்டு முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டார். மறுபுறம் வெஸ்டாபன் 7மிடத்திற்கு முன்னேறினார். நொரிஸ் 4மிடத்திற்கு முன்னேறி அசத்தினார். பியாஸ்ரி 19வது சுற்றில் பிட்ஸ்டொப் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள 20வது சுற்றில் நொரிஸ் பிட்ஸ்டொப்பிற்கு வந்தார்.
22வது சுற்றில் வீரர்களில் தர நிலைகள் முழூமையாக மாறுபட்டன. நோரிஸ் முதலிடத்திலும் லெக்லர்க் இரண்டாமி;;டத்திலும் பியாஸ்ட்ரி 3ம் இடத்திலும் போட்டியை தொடர வெஸ்டாபன் 13வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.
25வது சுற்றில் வைத்து 4மிடத்திற்கான போட்டியில் ரஸ்ஸல் தீவிரமாக களமிறங்கினார். 29வது சுற்றில் வைத்து ஹெமில்டனை பின்னுக்கு தள்ளி வெஸ்டாபன் முன்னேறியதுடன் தொடர்ச்சியான சிறப்பான செயற்பாட்டால். 11மிடத்திற்கு முன்னேறினார்.
32வது சுற்றில் வைத்து முதலிடத்திலிருந்த லெண்டோ நொரிஸ் பிட்ஸ்டொப் வாய்ப்பிற்கு வர அவரின் முதலிடம் பறிபோனது. மீண்டும் லெக்லர்க் முதலிடத்திற்கு முன்னேறியதோடு பியாஸ்ட்ரி 2மிடத்திற்கு முன்னேறினார. பின்னர் முதலிடத்தலிருந்த லெக்லர்க் பிட்ஸ்டொப்பிற்கு வர அவரின் முதலிடமும் பறிபோனது.
பின்னர் 51வது நிமிடத்தில் பியாஸ்ட்ரி தனது முழூ திறமையயையும் வெளிப்படுத்தி 2மிடத்திற்கு முன்னேறி லெக்லர்கை பின்னுக்கு தள்ளினார். நொரிஸ் முதலிடத்தில் போட்டியை தொடர்ந்தார்.
61வது நிமிடத்தில் வைத்து லெக்லர்க் மற்றும் ரஸ்ஸலுக்கிடையில் பலத்த போட்டி நிலவியது. 62வது நிமிடத்தில் ரஸ்ஸல் லெக்லர்கை பின்னுக்கு தள்ளி 3மிடத்திற்கு முன்னேறி அசத்தினார். இரண்டு சுற்றுக்களே எஞ்சியிருந்த நிலையில் மீண்டும் முதலிடத்திற்கான போட்டியில் நொரிஸ் மற்றும் பியாஸ்ட்ரி தீவிரமாக களமிறங்கினார்கள். சிறிய இடைவெளியில் இவர்களில் யார் ஹங்கேரியன் குரொன்ப்ரீயை வெல்லப்போகிறார்கள் என்ற போட்டி சூடுபிடிக்க தொடங்கியது.
பியாஸட்ரி சிறிய இடைவெளியில் முதலிடத்தை தவறவிட்டார். இறுதி சுற்றான 70வது சுற்றில் சிறிய இடைவெளியில் லெண்டோ நொரிஸ் 1 மணித்தியாலம் 35 நிமிடங்கள் 21 செக்கன்களில் முதலிடத்தை பெற்று அசத்த 0.698 மில்லி செக்கன் வித்தியாசத்தில் பியாஸ்ட்ரி இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டார். ரஸ்ஸல் 3மிடத்தையும் லெக்லரக் 4மிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.
நொரிஸ் இப்பருவகாலத்தில் தனது 5வது வெற்றியை பதிவு செய்து அசத்தினார்.