நண்பர்கள் உடன் நீராட சென்ற 22 வயது இளைஞன் நீரில் மூழ்கி பலி

கினிகத்தேனை, மார்ச் 12

சிவனொளிபாதமலை தரிசனம் செய்து விட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில் இடையில் நண்பர்கள் உடன் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் பலியான சம்பவமொன்று கினிகததேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை நகருக்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்தவர் ஆணமடுவ பிரதேசத்தைச் சேர்ந்த கவிந்து திஸார வயது 22 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நீராடிக் கொண்டிருக்கும் போது நீரில் இழுத்துச் செல்லப்பட்டு கற்குகையில் இறுகியதன் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் சடலத்தினை கெனில்வேத் தோட்ட மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து மீட்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைககாக கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply