உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் குற்றச்சாட்டை நிராகரித்த ஐ.நா

ஜெனீவா, மார்ச் 12

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இதற்கிடையில், உக்ரைன் உயிரி ஆயுதத்தை (புதிய வைரஸ்) ஆய்வகங்களில் தயாரித்து வந்ததாக ரஷியா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இந்த உயிரி ஆயுத தயாரிப்பு அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உதவியுடன் நடைபெற்று வந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உக்ரைனின் உயிரி ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டதாக எழுந்த புகார் மற்றும் ரஷ்யாவின் தாக்குதல் தொடர்பாக ஐநா பாதுகாப்பு சபையில் இன்று கூட்டம் நடைபெற்றது. அதில், உயிரி ஆயுதங்கள் தயாரிப்பு தொடர்பான குற்றஞ்சாட்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் முன்வைத்தது. ஆனால், இந்த குற்றஞ்சாட்டுகளை ஐ.நா. சபை நிராகரித்துள்ளது.

Leave a Reply