ரஷ்ய அரசு செய்தி ஊடகங்களின் ஒளிபரப்புகளை உலக அளவில் தடை செய்த யூடியூப்

வாஷிங்டன், மார்ச் 12

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷ்யா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது.

ரஷ்யா – உக்ரைன் இடையே நடத்து வரும் போரில் இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலகின் பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மேலும், பல்வேறு நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் செயல்பாடுகளை நிறுத்தி வருகின்றன.

அந்த வகையில், ரஷ்ய அரசு செய்தி ஊடகங்களில் ஒளிபரப்புகளை யூடியூப் நிறுவனம் உலக அளவில் தடை செய்துள்ளது. ரஷ்யாவின் அரசு செய்தி ஊடகங்கள் இனி யூடியூப் பக்கங்களில் இடம்பெறாது. இது ரஷிய அரசு செய்தி நிறுவனங்களான ஆர்டி, ஸ்புட்னிக், டாஸ் உள்ளிட்ட பல செய்தி நிறுவனங்களுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply