
12.08.1990 அன்று ஏறாவூர் நிறைய ஜனாஸாக்கள். மக்கள் கதி கலங்கி நின்ற நாள். ஒரே நேரத்தில் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட தினமாகும். உறக்கத்திலிருந்த பெண்கள் பிள்ளைகள், கர்ப்பிணித்தாய்மார்கள், வயதானவர்கள், வாலிபர்கள் பலரும் சுட்டும், வெட்டியும் கொலைசெய்யப்பட்டார்கள். அந்த கொடிய நிகழ்வு நடந்து 35 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.