ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் நான் கூறிய கருத்து சம்பந்தமாக வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொள்வதற்காகவே குற்றப்புலானாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
சர்வதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட அமெரிக்காவின் எப்.பி.ஐ நிறுவனம், ஈஸ்டர் தாக்குதலுக்கு மூலதன உதவி செய்தவர் ஹிப்ராஹிம் என்ற வர்த்தகர் என குறிப்பிட்டுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் போது அவரின் மகன்கள் இருவர் மற்றும் மருமகள் தற்கொலை குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.
ஹிப்ராஹிம் தொடர்பில் முன்னாள் குற்றபுலனாய்வு அதிகாரி நிலந்த ஜயவர்த்தன பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல்கள் வழங்கியும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.
அந்த அதிகாரி ஓய்வோதியம் கூட இல்லாமல் வீட்டுக்கு அனுப்பட்டுள்ளார். ஆனால் தாக்குதல் தொடர்பில் தகவல் தெரிந்தும் அறிவிக்காமல் இருந்தவர்கள் மீண்டும் சேவையில் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.