முத்துநகர் நிலப் பிரச்சினை: மக்களை இன்னும் தவறாக வழிநடத்தும் குழு! பிரதி அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

நீதிமன்ற உத்தரவுகள் அல்லது சட்ட சிக்கல்கள் இல்லாத அனைத்து நிலங்களையும் விவசாயிகள் விவசாயத்திற்கு பயடுத்துவதற்கு அனுமதிப்பதென்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

திருகோணமலை – முத்து நகர் காணிப் பிரச்சினை குறித்து, பிரதி அமைச்சர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, 

முத்து நகர் நிலப் பிரச்சினை ஜூலை 29, 2025 அன்று அடிப்படையில் தீர்க்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலகம் முன் நடைபெற்ற  போராட்டத்திற்கு முன்பே இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

நீதிமன்ற உத்தரவுகள் அல்லது சட்ட சிக்கல்கள் இல்லாத அனைத்து நிலங்களையும் விவசாயிகள் விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த நிலத்தில் சுமார் 10% சூரிய சக்தி நிறுவனங்கள் வேலை செய்யத் தொடங்கிய இடமாகும். அந்தப் பகுதிகளை மட்டுமே பயன்படுத்த முடியாது, 

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உதவி வழங்கவும், நிலங்களை திருப்பித் தரவும் ஏற்கனவே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டதாக அறிந்த, ஒரு குழு இன்னும் மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும், அவர்களின் நோக்கம் பிரச்சினையைத் தீர்ப்பது அல்ல, நாட்டில் ஸ்திரமின்மையை உருவாக்குவதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *