உறுதியான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும்; காற்றாலை , கனிய மணல் அகழ்வு 13ஆவது நாளாகவும் போராட்டம்!

மன்னாரில்  இடம்பெறும் காற்றாலை, கனியமணல் செயற்றிட்டங்கள் தொடர்பில் உறுதியானதும் இறுதியானதுமான தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்து 13 ஆவது நாளாகவும் மன்னார் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். 

மன்னார் பிரதான சுற்றுவட்ட பகுதியில் மக்கள் பல்வேறு கோசங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாதைகளை ஏந்தியவாறும் 13 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

குறிப்பாக அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பில் காற்றாலை செயற்திட்டங்களை ஒரு மாத காலம் நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதியினால் வாக்குறுதி வழங்கப்பட்ட போதிலும் உறுதியான முடிவு வரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். 

முன்னதாகவே கடந்த வாரம் போராட்டம் இடம்பெற்ற நிலையில் ஒரு வாரகாலம் காற்றாலை செயற்திட்டத்தை நிறுத்தி வைப்பதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்திருந்தார். 

எனினும் அவரது வாக்குறுதி நிறைவேற்றப்படாமல் நள்ளிரவு நேரங்களில் காற்றாலை செயற்திட்டங்களுக்கான உதிரிபாகங்கள் மன்னார் நகருக்குள் மக்களின் எதிர்ப்பை மீறியும் கொண்டு செல்லப்பட்டது. 

இந்த பின்னனியிலேயே ஜனதிபதியின் வாக்குறுதியிலும் நம்பிக்கையற்ற தன்மையே காணப்படுவதன் அடிப்படையில் மக்கள் தொடர்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *