துரித உணவுக்கு மக்கள் அதிகளவு பணம் செலவிடும் நாடுகள் எவை தெரியுமா?

உலகம் முழுவதும்  மக்கள் மத்தியில் துரித உணவு நுகர்வு அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக உலகம் முழுவதும் துரித உணவு சந்தை வேகமாக வளர்ந்து வருகின்றது.
அந்தவகையில் உலகில் மக்கள் துரித உணவுக்கு அதிக பணம் செலவிடும் நாடுகள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.

 இந்த பட்டியலில், ரூ.1,788.88 கோடியுடன் பிரான்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது. பிரெஞ்சு துரித உணவு கலாச்சாரம் பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் நவீன துரித உணவு சங்கிலிகளை அடிப்படையாகக் கொண்டது. பிரபலமான வகைகளில் சாண்ட்விச்கள் மற்றும் பீட்சா ஆகியவை அடங்கும்.

அந்தவகையில்  உலகின் மிகப்பெரிய துரித உணவு சந்தையாக அமெரிக்கா உள்ளது எனவும், அந்நாட்டில் மொத்த ஆண்டு வருவாய் சுமார் $841.9 மில்லியனாகக் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில்  மெக்டொனால்ட்ஸ், கே.எஃப்.சி, ஸ்டார்பக்ஸ் போன்ற உணவகங்கள் பாரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இதற்கு அடுத்த படியாக  $173.1 மில்லியன் வருவாயுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. பர்கர்கள் மற்றும் சாண்ட்விச்சுகள் அங்கு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள உணவுகளாகும்.

 ஸ்வீடன், ஆஸ்திரியா, கிரீஸ் மற்றும் நார்வே ஆகியவை பட்டியலில் இடம் பெற்றுள்ளன. ஆனால் வருவாய் தரவு இல்லாததால் இந்த நாடுகளில் துரித உணவுத் துறையின் தரவு குறைவாக உள்ளது.

மேலும் இப்பட்டியலில்  மூன்றாவது இடத்தில் $214.6 மில்லியன்  ஆண்டு வருவாயுடன் பிரான்ஸ் உள்ளது. அங்கு விற்பனை செய்யப்படும் பாரம்பரியம் சார்ந்த  துரித உணவுகள்  மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றதாகக் காணப்படுகின்றது.
இப்பட்டியலில் மெக்சிகோ $211.9 மில்லியன்  வருவாயுடன் 4வது இடத்திலும்  தென் கொரியா $132.4 மில்லியன்வருவாயுடன் 7வது இடத்தில் உள்ளன.
சீனா $176.9 மில்லியன் வருவாயுடன் 9வது இடத்தில் உள்ளது. மேலும்  நோர்வே 10வது இடத்திலும் , இத்தாலி $195.2 மில்லியன்  வருவாயுடன் 11வது இடத்தில் உள்ளன.

 மெக்சிகோவில் மொத்த ஆண்டு துரித உணவு வருவாய் ரூ.1,766.47 கோடி ஆகும். நாட்டின் வளமான சமையல் பாரம்பரியம் அதன் துரித உணவுடன், குறிப்பாக டகோ மற்றும் சாண்ட்விச் சங்கிலிகளுடன் நன்றாக கலந்துள்ளது.

அத்துடன் இந்தியா இப்பட்டியலில் 13 ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவின்  ஆண்டு துரித உணவு வருவாய் சுமார் $857.5 மில்லியனாக உயர்வடைந்துள்ளது.
இந்தியா இப்பட்டியலில்  உலகளவில் 13வது இடத்தில் இருந்தாலும், நகரமயமாக்கல் மற்றும் இளம் மக்கள் தொகை காரணமாக விரைவில்  பட்டியலில் முன்னிலை வகிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த பட்டியலில் சீனாவும் உள்ளது. கிரீஸ் 8வது இடத்திலும், சீனா 9வது இடத்திலும் உள்ளன. ஆசிய துரித உணவு சந்தையில் சீனா 1474.40 மில்லியன் டாலர்களை துரித உணவு மூலம் ஈட்டியுள்ளது. வளர்ந்து வரும் நடுத்தர வர்க்கத்தினரும் அதிகரித்து வரும் வருமானமும் சீனாவில் துரித உணவின் வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *