
1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி இரவு ஏறாவூர் மற்றும் அதனைச் சூழவுள்ள கிராமங்களிலும் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் ஞாபகார்த்தமாக ஷுஹதாக்கள் நினைவு தினம் வருடாந்தம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பான பிரார்த்தனை நிகழ்வு ஷுஹதாக்கள் ஞாபகார்த்த பேரவையின் ஏற்பாட்டில் அதன் ஸ்தாபகத் தலைவர் எம்.எல்.அப்துல் லத்தீப் தலைமையில் நடைபெற்றது.