மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று (16) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதேவேளை, வடமேல் மாகாணத்தில் சில இடங்களிலும் மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் பிற பகுதிகளில் சீரான வானிலை நிலவுமெனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், மத்திய மலைநாட்டு மேற்கு சரிவுகள் வடக்கு, வடமத்திய, வடமேல், தெற்கு மாகாணங்கள் திருகோணமலை மாவட்டம்
போன்ற இவ்விடங்களில் மணிக்கு 40–50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசலாம் எனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.