பாலியல் தொந்தரவுகளை தடுத்தல் தொடர்பான; பயிற்சிநெறி முன்னெடுப்பு

மகிழ்ச்சியான குடும்பத்திற்கான நேர்முக சிந்தனையினை உருவாக்குதல் மற்றும் தகவல் தொடர்பு மூலம் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான மீறலைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிநெறி.

மகிழ்ச்சியான குடும்பத்திற்கான நேர்முக சிந்தனையினை உருவாக்குதல் மற்றும் தகவல் தொடர்பு மூலம் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான மீறலைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிநெறி (14) மற்றும் (15) ஆம் திகதிகளில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமாரதலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

இதன்போது சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் வைத்திய கலாநிதி காமினி சமரவிக்கிரம  வளவாளராக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

மகளிர் விவகார அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன இணைந்து இச்செயலமர்வினை முன்னெடுத்துள்ளன. இதற்கான நிதி அனுசரணையினை UNFPA நிறுவனம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்பயிற்சிநெறியில் மகளிர் அபிவிருத்தி மாவட்ட இணைப்பாளர் இனோகா தமயந்தி , பிரதேச சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள், குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *