அமெரிக்க கடற்படைக் கப்பல் சாண்டா பார்பரா கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்தது.
அமெரிக்க கடற்படைக் கப்பலான சாண்டா பார்பரா (LCS 32) என்ற கப்பல் மாற்று நோக்கத்திற்காக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படை, கடற்படை மரபுகளுக்கு இணங்க பலத்த வரவேற்பை அளித்தது.
127.6 மீ நீளமுள்ள லிட்டோரல் காம்பாட் கப்பல் அமெரிக்க – 7ஆவது கடற்படையின் ஒரு பகுதியாகும்.
கொழும்பில் தங்கியிருக்கும் போது, கப்பலின் குழுவினர் நாட்டின் சில சுற்றுலா தளங்களைப் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அமெரிக்கக் கடற்படைக் கப்பலான சாண்டா பார்பரா எதிர்வரும் 22ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.