நல்லூர் திருவிழாவிற்காக கொழும்பில் இருந்து குடும்பத்துடன் யாழ்.வந்த நபர் ஒருவர் கட்டிலில் உறங்கியவேளை நேற்று (15) காலை கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் வசிக்கும் சிவநாதன் சிவனேசன் (வயது- 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
கொழும்பில் வசிக்கும் குறித்த நபர், நல்லூர் ஆலய திருவிழாவிற்காக கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு யாழ்ப்பாணத்திற்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.
குடும்பத்துடன் வந்த அவர் திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார்.
வீட்டில் கட்டிலில் உறங்கியவேளை நேற்றையதினம் (15) காலை திடீரென கட்டிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
அதனையடுத்து வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்காக அம்புலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டது. எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக அம்புலன்ஸ் வண்டியில் வந்த மருத்துவ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.