குளத்தில் குளிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதுரங்குளி கரிகட்டைப் பகுதியில் வசிக்கும் புத்தளம் ஆனந்த தேசிய பாடசாலையைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவனான இதுவர சுதம்மிகா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் – மதுரங்குளி வேலாசி கெமுனு குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் குறித்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
மதுரங்குளி வேலாசிப் பகுதியில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்ற குறித்த மாணவன், வேலாசி கெமுனு குளத்தில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மாணவன் நீரில் மூழ்குவதைக் கண்ட அவரது உறவினரான மாமி நீரில் குதித்து மாணவனை காப்பாற்ற முயற்சித்த போதிலும் அந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
மாணவனின் மாமியும் நீரில் மூழ்கி ஆபத்தான நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.