சைக்கிள்களுக்கு இரவு நேரத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்கள்!

யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக துவிச்சக்கர வண்டிகளுக்கு இரவு நேரத்தில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

தூய்மையான இலங்கை வேலைத்திட்டத்தின் கீழ் விபத்துக்களை குறைக்கும் வகையில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் குறித்த வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன்,தூய்மை இலங்கை திட்ட பணிப்பாளர் தசூன் உதார,தேசிய மக்கள் சக்தியின் மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன், போக்குவரத்து பிரிவு உதவி பொலிஸ் பரிசோதகர் ஜேசுதாஸன் உள்ளிட்ட பலரும் இதன்போது பங்கேற்று துவிச்சக்கர வண்டிகளுக்கான ஸ்டிக்கர்களை ஒட்டினர்.

தூய்மை இலங்கை திட்டத்தை தெளிவுபடுத்தும் துண்டுப்பிரசுரங்களும் இதன்போது பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *