
கொழும்பு, மார்ச் 12
ராஜபக்ஷ குடும்பத்திற்கு இனி ஒருபோதும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின் போது, பாராளுமன்ற உறுப்பினர் வீரவன்ச, ராஜபக்ஷ அணியுடன் இணைந்து மீண்டும் ஒருபோதும் போட்டியிடப் போவதில்லை என்றார்.
எதிர்காலத்தில் இந்த குழுவுடன் அரசியல் முன்னணியில் ஈடுபடமாட்டேன் என முன்னாள் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எதிர்காலம் குறித்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, தற்போதைய சூழ்நிலையின் விளைவாக நாமால் எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபட முடியும் என நம்பவில்லை என தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் செயற்பாடுகள் நாமல் ராஜபக்சவுக்கு பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், அது அவரது எதிர்கால அரசியல் பயணத்தை பாதிக்கும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.




